சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு..! - தேவசம் போர்டின் முக்கிய அறிவிப்பு!!

 
sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

sabarimala

கேரள மாநிலத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது.  இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்களின் வருகை குறைந்திருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  சபரிமலை செல்ல நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.  கார்த்திகை மாதம் என்பதால் கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம் காரணமாக சபரிமலையில் தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை,  மதியம் 3.30 மணிக்கு சாத்தப்படுகிறது.  மாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11:30 மணி வரை நடை திறக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சபரிமலை நடை ஒரு நாள் 19 மணிநேரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

sabarimala

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு கருதி முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தினசரி பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுவதால் அதிக நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தேவசம் போர்டு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன் மூலம் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிக விரைவில் சாமி தரிசனத்தை மேற்கொள்வதன் மூலம் சிரமத்தை தவிர்க்கலாம்.