இளம்பெண் பிறப்புறுப்பில் கொரோனா சாம்பிள் எடுத்த ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

 
sh

 மூக்கு, தொண்டையில் கொரோனா சாம்பிள் எடுத்து வரும் நிலையில்,   இளம்பெண் பிறப்புறுப்பிலும் சாம்பிள்  எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த மருத்துவமனை ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.  இதை அடுத்து அங்கு பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சென்றிருக்கிறார்.

sa

 அங்கிருந்த லேப் டெக்னீசியன் ஒருவர் அந்த  இளம்பெண்ணுக்கு முதலில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் கொரோனா சாம்பிள் எடுத்திருக்கிறார்.  அதன்பின்னர் அந்த இளம்பெண்ணிடம்,  கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை முழுமையாக  கண்டறிய வேண்டும் என்றால் பிறப்புறுப்பிலும் மாதிரி எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண்,   அங்கிருந்து எல்லாம் மாதிரி எடுப்பார்களா என்று கேட்க,   முழுமையான ரிசல்ட் கிடைக்க வேண்டுமென்றால் பிறப்புறுப்பிலிருந்து தான் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்ல,   அதையும் அந்த அந்த இளம்பெண் நம்பியிருக்கிறார்.   அதன்படி அந்த லேப் டெக்னீசியன் அந்த இளம் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரி எடுப்பதாக சொல்லி செய்திருக்கிறார்.

இருந்தாலும் வீட்டிற்கு வந்த அந்த இளம் பெண் பெண்ணுக்கு  சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.   உடனே அவர் தனது சகோதரரிடம் இதுகுறித்து சொல்லியிருக்கிறார். அந்த  சகோதரர் ஒரு மருத்துவரை அணுகி இது மாதிரி பிறப்புறுப்பிலிருந்து கொரோனா தொற்று மாதிரி எடுக்கப்படுகிறதா? என்று கேட்க,  மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் இருந்து மட்டும் தான் கொரோனா மாதிரிகள் எடுக்க வேண்டும்.  மற்றபடி உடலில் வேறு எங்கேயும் இருந்து எடுக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் .

 தன் சகோதரியை அந்த லேப் டெக்னீசியன் ஏமாற்றி இருப்பதை தெரிந்து கொண்ட அவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர ,   வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த லேப் டெக்னீசியனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்  சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.