கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4,000 - பிரதமர் மோடி அறிவிப்பு..

 
modi

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம்தோறும் 4 அயிரம் ரூபாய்  கிடைக்க  ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினை இன்று  பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கல்வி நிதியுதவி பெறும் குழந்தைகளுக்கு,  பி.எம்.கேர்ஸ் திட்ட கணக்கு அட்டையும் ( பாஸ்புக்) ,   பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும்  வழங்கப்பட்டது.  அப்போது  பேசிய பிரதமர் மோடி, 'கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும்   நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என்று தெரிவித்தார்.  

modi

மேலும்,  நான் குழந்தைகளுடன் ஒரு பிரதமராக இல்லாமல்,  குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பேசுவதாக தெரிவித்தார்.  அவர்களுடன் தான் நிம்மதியாக இருப்பதாகவும்,  மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின்  கடமை என்றும் பிரதமர் கூறினார்.  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது சிறு ஆறுதலைத் தரும் என்றும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாதுஎன்றுக் குறிப்பிட்ட பிரதமர் மோடி,  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் தொழிற்கல்வி, உயர்கல்விக்கு கடன் தேவைப்பட்டால் பிஎம் கேர்ஸ் நிச்சயம் உதவும் என்று தெரிவித்தார்.  

modi

அத்துடன் இதர திட்டங்கள் மூலம் குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக்வும்,  பிஎம் கேர்ஸ் உதவிபெறும் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது, எதிர்கால கல்விக்கு அதிக பணம் தேவைப்படும் என்றார். அந்த கல்வித் தேவைக்காக  18-23 வயது வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும்,  23 வயதாகும் போது  10 ரூபாயும்   லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.  ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையின் மூலம் ரூ.5 லட்சம் வரை மாணவர்கள் மருத்துவ வசதி பெற்றுகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.