இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. - கோவா முதல்வரின் அதிரடி அறிவிப்பு..

 
Gas

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்  என அமாநில அரசு அறிவித்துள்ளது.

கோவாவில் நடத்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசு 20 இடங்களை கைப்பற்றியிருந்தது.  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்கள் ஆட்சியைப் பிடிக்க தேவைப்பட்ட நிலையில், 3 சுயேட்சைகள், மஹாராஷ்டிரவாதி கோமந்த் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள்  பாஜகவுக்கு ஆதரவு அளித்தன. அதன்படி நேற்று 2வது முறையாக பிரமோத் சாவந்த் கோவா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.  

பிரமோத் சாவந்த்

அதனைத்தொடர்ந்து புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர்  பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில்,  சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையில், தாங்கள் அட்சிக்கு வந்தால் ஆண்டுக்க் 3  கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

அதனை நிறைவேற்றும் விதமாக வரும் புதிய நிதியாண்டு முதல்  3  இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த  அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்  இரும்புத் தாது சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரமோத் சாவந்த் தெரிவித்திருக்கிறார்.