'இவர்களுக்கு' ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை - மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!

 
domestic flights

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது மூன்றாம் அலையாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொற்று  எண்ணிக்கை என்பது வெகுவாக குறைந்துள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 67,597  பேர், நேற்று  71,365 பேர் கொரோனாவால்   பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 70ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அத்துடன்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,06,520 ஆக உள்ளது. 

corona

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.  

rajamouli-airport-55

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில்,  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என்றும்  விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமில்லை  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று  குறைந்து வருவதால் தடுப்பூசியினை  முழு அளவில் செலுத்தி கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் கட்டாயம் இல்லை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .