#BREAKING : குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

 
election commision

குஜராத் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன.  மொத்தம் 4.9 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி மற்றும் பெண் வாக்காளர்கள் 2.37 கோடி பேர். 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. குஜராத் மாநில சட்டப் பேரவையின்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

Gujarat Election

 இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதாவது  வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும், அனைத்து  வாக்கு சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும் எனவும் கூறினார்.