காஷ்மீர் விகாரத்தில் பாக். ஆதரவு.. ட்ரெண்டான #BoycottHyundai.. பதறிப்போய் விளக்கமளித்த ஹூண்டாய் நிறுவனம்...

 
ஹூண்டாய் நிறுவனம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிற்தானுக்கு  ஆதரவு தெரிவிக்கும் விதமாக  ஹூண்டாய் கார் நிறுவனத்தின்  டீலர்  ட்விட்டரில் பதிவிட்டிருந்தது கடும் எதிர்ப்புக்கு  உள்ளானது.  இதனையடுத்து தற்போது  ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தில்  பிரச்சனை இருந்து வருகிறது.  இதனால் எல்லையில் உள்ள காஷ்மீரில் எப்போதுமே பதற்றமான சூழல் இருந்து வருகிறது. பல நேரங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.  இந்நிலையில்  கடந்த பிப் 5 ஆம் தேதி  ஹூண்டாய் நிறுவனத்தின் பாகிஸ்தான்   hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், ’காஷ்மீர்ரில்  சுதந்திரத்திற்கான போராட்டம்’, காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.  பாகிஸ்தானுக்கு ஆதரவான இந்த பதிவினை ஹூண்டாய் நிறுவனத்தின்  பாகிஸ்தான் டீலர் பதிவிட்டதாக தெரிகிறது.  

hyundai

இந்தியாவில் இரண்டாவது முன்னணி கார் நிறுவனமாக இருந்து வரும் ஹூண்டாய், பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி  பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இதனையடுத்து ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி #BoycottHyundai என்ற ஹேஷ்டேகை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்தனர்.  இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கான எதிர்ப்புக் குரல் வலுக்கவே, தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா விளக்கமளித்திருக்கிறது.  இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஹூண்டாய் ட்வீட்

அதில், “ ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் , கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்திய சந்தையில் உண்மையாக இருக்கிறது.  இந்திய தேசியவாத கொள்கையை மதிப்பதில்  நாங்கள்   உறுதியுடன் இருக்கிறோம். ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம்.  உணர்வுகளை மதிக்காத  சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.   ஹூண்டாய் பாகிஸ்தான் ட்விட்டர் பக்கத்தில் வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்...   எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின்,  இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்திருக்கிறது.