பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டின் பயணம் திட்டமிட்டபடி உள்ளது - இஸ்ரோ தலைவர் தகவல்

 
ISRO Somnath

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டின் முதல் கட்ட பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். 
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைத்து விண்ணில் ஏவுகிறது.  இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி. எஸ். எல். வி. சி 54 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இந்த ராக்கெட் ஓசன் சாட் 3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் எட்டு சிறிய வகை நானோ செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.  இந்த ராக்கெட் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. பி. எஸ். எல். வி. ராக்கெட்டில் இது 56வது திட்டப்பணி ஆகும். 

pslv


 
இதனிடையே ராக்கெட்டின் பயணம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டின் முதல் கட்ட பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ராக்கெட்டின் செயல்பாடுகளை அனைத்து படிகளிலும் கண்காணித்து வந்தோம். அவை சிறப்பாக அமைந்துள்ளன. முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இலக்கில் நிலைநிறுத்தப்படும் என நம்புகிறோம். பிற்பகல் 1.45 மணிக்கு ராக்கெட்டின் அனைத்து செயல்பாடுகள் முடிவடையும் எனக் குறிப்பிட்டார்.