அதிகரிக்கும் கொரோனா.. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..

 
corona


நாடு முழுவதும் கொரோனா  பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது,  

கொரோனா 3 வது அலை குறைந்ததை அடுத்து,  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும்  கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.  ஒட்டு மொத்த இந்தியாவுக்குமாக சேர்த்து தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. மக்கள் சற்று நிம்மதிப் பெறுமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.   இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நேற்று ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி , மஹாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகுய மாநில அரசுகளுக்கு கசிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  அதில்,   கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது என்றும், கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி பாதிப்பும் 1000 ஆக பதிவாகி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  

கொரோனா

ஆனால்  அண்மை காலமாக  சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருவதாக சுட்டிக்காட்டிய அவர்,   கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும்  தொடர்ந்து  தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்றுமாறும்   அறிவுறுத்தினார். நோய்ப் பரவலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனாவை தடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைவாகவும், திறமையாகவும் மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.   

rajesh bhushan

முறையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுதல்,   பொது இடங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது,  முககவசம் அணிவது  ஆகியவற்ரிற்கு   முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும்,  தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாடு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.