இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,805 பேருக்கு கொரோனா

 
Covid india Covid india

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம்  4,272 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 3,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,40,24,164  ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 26 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,655  ஆக அதிகரித்துள்ளது.  

இதேபோல்  குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,24,164  ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை  38,293 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில்  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219 கோடியை நெருங்கியுள்ளது.