இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு

 
corona

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை முதல் அலை ,இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.   இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை வருகிற 31ஆம் தேதிக்கு பிறகு செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்வதுடன், ஸ்மூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

india corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி  நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இது நேற்றை காட்டிலும் சற்று குறைவாகும். நேற்று இந்தியாவில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றிலிருந்து1,594 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,24,89,004 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நோய் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,21,129 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் தொற்றுக்கு 14,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் இதுவரை 184 கோடியே 06 லட்சத்து 55 ஆயிரத்து 005 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.