மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் இதோ!

 
Covid india

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த நில நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்தது. நேற்று முன் தினம் 8,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 9,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 72 பேர் இறந்துள்ளனர்.

covid

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,251 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டில் தற்போது 1,01,343 வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 3.48% ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 38 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 209 கோடியை நெருங்கியுள்ளது.