நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,917 பேருக்கு கொரோனா

 
corona corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று அதிகரித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,917 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில் நேற்று அதற்கு கீழே குறைந்தது. நேற்று  14,092 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 14,917 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  1,17,508 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 32 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 069 ஆக பதிவாகியுள்ளது.   கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 7.52 சதவீதமாகவும், வார பாதிப்பு விகிதம் 4.65 ஆகவும் உள்ளது.