சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் இதோ!

 
Covid india

இந்தியாவில் நேற்றைவிட தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று இந்தியாவில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 20,018 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,23,535 லிருந்து 1,19,264 ஆக குறைந்துள்ளது.

13

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 68 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 996 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  20,018 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரத்து 112 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 24.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 207 கோடியாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.36% ஆக குறைந்துள்ளது.