இந்தியாவில் தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா பாதிப்பு

 
india corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என இதுவரை கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நான்காவது அலை ஜீன் மாதத்தில் வரக்கூடும் என கூறப்படுகிறது. அடுத்து வரும் உருமாற்றத்தின் காரணமாக நான்காம் அலைக்கு வாய்யுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும் கூட வைரஸ் உருமாற்றத்தின் காரணமாக தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது. 

india corona

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,876 பேருக்கும், நேற்று முன் தினம்  2,568 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த இரண்டு நாட்களை விட இன்றைய பாதிப்பு குறைந்துள்ளது. இதேபோல் தொற்றில் இருந்து குண்மடைந்து 4,491 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது. 

corona

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 60 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 5,16,132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை நாட்டில் 30,799 சிகிச்சையில் உள்ளனர். அதாவது 0.07 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதேபோல் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது.