இந்தியாவில் இறங்கு முகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் இதோ!

 
Covid Positive

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன் தினம்  3,947  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது.     இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது.  

நாட்டில் தற்போது வரை  37,444- பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. நாட்டில்  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219 கோடியை நெருங்கியுள்ளது.