நீண்ட நாட்களுக்கு பிறகு 10,000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 10,000க்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில். நேற்று அதற்கு கீழே குறைந்தது. நேற்று  14,917 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 10,000க்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,11,252 ஆக குறைந்துள்ளது. 

16 aug

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 29 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 098 ஆக பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 15,040 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.15% சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாட்டில் 6 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 208 கோடியாக அதிகரித்துள்ளது.