இந்தியாவில் நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

 
Covid india

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை முதல் அலை ,இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனிடையே நான்காவது அலை ஜூலை மாதத்தில் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இருந்த போதிலும், கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

india corona

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட சற்று குறைவாகும். நேற்று 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன் தினம்  1,088 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,743 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 810 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,0738 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 11,191 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாக உள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம்,  98.76 சதவீதமாக உள்ளது. இதேபோல் இதுவரை 186.30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது