ஊழியர்களுக்கு வார சம்பளம் - பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!!

 
ttn

இந்தியா மார்ட் நிறுவனம் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது.

tn

நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது பணம் என்ற ஒற்றை இலக்கை நோக்கித்தான்.  அதிலும் மாதம் சம்பளம் பெறுவோர் , மாதத்தின் முதல் வாரத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பர். ஆனால் மாதக்கடைசியில் புலம்பித் தீர்த்து விடுவர்.  எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் மாத கடைசியில் வாரத்தை ஓட்டுவது என்பது சிரமமான காரியமாக இருக்கும். மாத இறுதி நாட்களில் குடும்ப செலவுகளை சமாளிக்க  சிலர் கடன் வாங்கும் சூழலுக்கும் தள்ளப்படுவர். இப்படி பல நெருக்கடிகளை நம்மில் பலர் சந்தித்து வரும் நிலையில் வார சம்பளம் என்ற முறையை இந்தியா மார்ட் நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது. தினக்கூலி , வாரக் கூலி ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது தானே என்று உங்களுக்கு தோன்றலாம், இருந்தாலும் ஒரு பெரிய நிறுவனம் வார சம்பளம் முறையை அமல்படுத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.

tn

ஒவ்வொரு வாரமும் சம்பளத்திற்காக காசோலை ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இது ஊழியர்களுக்கு வெகுவாக பயனளிக்கும். இதன்மூலம் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம் என்றும் இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி தெரிவித்துள்ளார்.இந்தியா மார்ட் நிறுவனத்தின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வெகுவாக எழுந்துள்ளன.