மணிப்பூரில் பதற்றம் - 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு

 
Manipur

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில்  சாதிக்கலவரத்தால் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சாதிக் கலவரமாக மாறியது. ஆத்திரமடைந்த ஒரு தரப்பினார் அங்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்றுக்கு தீ வைத்த நிலையில், அதில் பயணித்த 3 இளைஞர்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய சாதிக் கலவரமாக மாறியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மேலும் கலவரங்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேன் தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பிஷ்னுபூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில கூடுதல் தலைமை செயலர் அறிவித்துள்ளார்.