கோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளி 6-18 வாரங்களாக குறைப்பு..

 
Covishield vaccine

கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு  2 டோஸ்களுக்கான இடைவெளி 8 முதல் 16 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக நாடுகள் உச்சரிக்கத்தொடங்கிய பெயர் ‘கொரோனா’. சிறு பிள்ளைகளைக் கூட தூக்கத்தில் எழுப்பி  கேட்டாலும் சொல்லுவார்கள், அந்த அளவிற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை  உலுக்கி எடுத்த பெயர்.  இந்த கொரொனா வைராஸில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே இருந்தது.  அந்தவகையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

vaccine

கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களில் 2வது டோஸ் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் கோவிஷீல்டு  தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 6 முதல் 8 வார இடைவெளியில் 2வது டோஸ் போடலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர்  பல்வேறு  காரணங்களால் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கான கால இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவிஷீல்டு இரு டோஸ் இடைவெளியை 8 - 16 வாரங்களாக மாற்றலாம் என பரிந்துரை செய்துள்ளது.

சென்னை வந்தடைந்தது ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி!

அதன் அடிப்படையில் நேற்று  கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கான இடைவெளி  குறைக்கப்பட்டிருக்கிறது.   இந்த புதுய கால அளவு மாற்றமும்,  முந்தைய இடைவெளியில்  கிடைத்த அதே  நோய் எதிர்ப்பு சக்தி பலன்களையே தருவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.  ஆனால் கோவக்சின் தடுப்பு மருந்து இடைவெளியில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.