நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு இது கட்டாயம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

 
neet

நீட் தேர்வு எழுத வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும், முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  
 
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.    அந்தவகையில் 2022 - 23 ஆம் கல்வியாண்டுக்கான  இளங்களை  மருத்துவப் படிப்புக்கான  நீட் தேர்வு   வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.  நாடு முழுவதும் 546  நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.  எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ்,  ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.  நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து  339 பேர் விண்ணப்பித்துள்ளதாக  தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதில்  கடந்த ஆண்டு விட   கூடுதலாக  2. 57   லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

நீட் தேர்வு

 இவர்களில் 10 லட்சத்து 64 ஆயிரத்து 606  பேர் பெண்கள்  ஆவர்.  8 லட்சத்து 7 ஆயிரத்து 711  ஆண்டுகளும்  ,  மூன்றாம்  பாலினத்தவர்கள் 12 பேரும் அடங்குவர்.    அதில்   தமிழகத்தில் இருந்து மட்டும் 1,42,286  பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,   31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வு நடைபெற இன்னும்  4  நாட்களே உள்ள நிலையில்,  இதற்கான  ஹால் டிக்கெட்   கடந்த 11 ஆம் தேதி  இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை..  இந்நிலையில் இன்று காலை 11.30 மணி முதல்  ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முகக்கவசம்

இந்த நிலையில், தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை  வெளியிட்டுள்ளது.  அதில், “அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.  மேலும், மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை” என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல்  பார்த்துக்கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.