ஜேபி நட்டா டுவிட்டர் முடக்கம் : ஹேக்கர்களின் டுவிட் நீக்கம்

 
j

பாஜக தேசியத் தலைவரின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.   கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்,   பிட்காயினை இந்தியா அதிகாரபூர்வமாக சட்டப்பூர்வமாக்கி இருப்பதாக ஹேக் செய்யப்பட்டது. 

 இந்த நிலையில் தற்போது ஜேபி நட்டா டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதையடுத்து,  உக்ரைனுக்கு நன்கொடை அளிக்க வேண்டும்.  முக்கியம் மக்களுடன் நில்லுங்கள்.   கிரிப்டோகரன்சி நன்கொடைகளை  ஏற்றுக்கொள்கிறேன்.  பிட்காயின் மற்றும் எத்தேரியம்  என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

p

 இன்னொரு பதிவு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கிறது . 

ஹேக் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அந்த டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டு கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து டுவிட்களும் நீக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருகிறது.  இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக உக்ரைன் கூறி வருகிறது.  ஆனால் இந்தியா நடுநிலையாக செயல்படுவதாக கூறி இருக்கிறது.   இந்த சூழலில் உக்ரைன் மக்களுடன் நில்லுங்கள் என்று ஹேக் செய்யப்பட்டதால்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.