பெல்ஜியம் நாட்டு பெண்ணை கரம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்

 
Karnataka Auto driver marries a Belgium girl in Hampi

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞரை இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

hampi auto driver married belgium citizen cemil | ವಿದೇಶಿ ಕನ್ಯೆ ಕೈ ಹಿಡಿದ  ಹಂಪಿ ಆಟೋ ಚಾಲಕ : ಅನಂತನ ಪ್ರಾಮಾಣಿಕತೆಗೆ ಕೆಮಿಲ್‌ ಫಿದಾ..! News in Kannada
 
ஹம்பி ஜனதா பிளாட் பகுதியை சேர்ந்த ரேணுகாம்மா மற்றும் மறைந்த அஞ்சினப்பா ஆகியோரின் மகன் ஆனந்தராஜ். இவர் ஹம்பி பகுதியில் ஆட்டோ டிரைவராகவும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சமூக சேவகரான கெமில் எனும் பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது அவர்களுடன் ஆனந்தராஜ் சுற்றுலா வழிகாட்டியாகவும் ஓட்டுநராகவும் பயணித்துள்ளார். சில நாட்களில் கெமில் ஆனந்தராஜ் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்தது.

இரு வீட்டார் சமூகத்துடன் இந்த காதல் ஜோடி திருமணம் செய்ய மூன்று வருடங்களுக்கு முன்பு முடிவு செய்த நிலையில் கோவிட் பெரும் தொற்று காரணமாக இவர்களது திருமணம் தடைப்பெற்றது தற்பொழுது கோவிட் பெரும் தொற்று குறைந்த மகளின் திருமணத்தை பெல்ஜியத்தில் கோலாகலமாக நடத்த வேண்டும் என்று கெமில் பெற்றோர் நினைத்தனர். ஆனால் இந்து முறைப்படி ஹம்பியில் திருமணம் நடக்க வேண்டும் என ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரும் கூறியதால், கெமில் தந்தை ஜீப் பிலிப் இதற்கு சம்மதித்தார். அதன்படி நான்கு வருடங்களாக காதலித்து வந்த இருவருக்கும் நேற்று ஹம்பியில் உள்ள விருபாக்சப்பா கோயிலில் இந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.