#JUSTIN வரதட்சணை கொடுமையால் விஸ்மயா தற்கொலை - கணவர் குற்றவாளி என தீர்ப்பு!!

 
tn

கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு வழக்கில் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 24 வயதான மருத்துவ மாணவி விஸ்மயா  நாயர் கடந்த 2020ஆம் ஆண்டு கிரண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு வரதட்சணையாக 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 11லட்சத்தில் கார் அளிக்கப்பட்டுள்ளது . இருப்பினும் கூடுதல்  வரதட்சணை அளிக்க வேண்டும் என்று கோரி மனைவி விஸ்மயாவை அவர் கொடுமை செய்துள்ளார்.  மனைவியை அடித்து துன்புறுத்தியதில் அவர் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

tn

கணவனால் ஏற்பட்ட காயங்களை வாட்ஸ்அப்பில் புகைப்படம் எடுத்து தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய அவர்,  அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.  நேரில் வந்து பேசுகிறோம் என்று விஸ்மயாவின் பெற்றோர் கூறிவிட்டு  அவரின் வீட்டிற்கு செல்வதற்குள் விஸ்மயா  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

tn

விஸ்மயா வரதட்சனை கொடுமையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில்,   கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கணவர் கிரண்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்த நிலையில்,  கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட  விஸ்மயா வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதில் கணவர் கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.  விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம்  கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன்,  தண்டனை விவரங்கள்  நாளை அறிவிக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளது.