இந்தி தினம் கொண்டாட வேண்டாம்! முதல்வருக்கு குமாரசாமி கடிதம்
கர்நாடகாவில் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட வேண்டாம் என முதல்வருக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு செப்டம்பர் 14ஆம் தேதி மாநில முழுவதும் ஹிந்தி தினத்தை அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவை கைவிட வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பாஜக முதல்வர் வசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை தவிர வேறு மொழிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அப்படி வழங்குவது கன்னட மொழிக்கும் கர்நாடக மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஹிந்தி தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அதில் ஒரு மொழியை அனைவருக்கும் திணிப்பதை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.