எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை : பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..

 
 எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை :  பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..

 எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து பெற்றோர்  போலீசில் ஒப்படைத்தனர்.

 எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை :  பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாப் ஹில்ஸ்  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரஜினி குமார். இந்த பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக ரஜினி குமார் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை :  பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..

இந்த நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர்,  அந்த சிறுமையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி  மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து  அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை :  பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..

மேலும் கடந்த இரண்டு மாதங்களாகவே ரஜினி குமார்,  அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.  இதனை அறிந்த பெற்றோர் இன்று காலை பள்ளிக்கு வந்து டிரைவர் ரஜினி குமாரை பிடித்து தர்ம அடி  கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதனை அடுத்து ரஜினி குமார் மீது போக்சோ   சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த , போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.