வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை

 
voter id

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம், அனுமதி வழங்கியது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தால் கள்ள ஒட்டுகள் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. 
 
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என வாக்குச்சாவடி அலுவலர்கள் பொது மக்களை எச்சரிக்கும் சம்பவம் தொடர்ந்து வருவதால் இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்றால் இதை இணைப்பதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் எனவே இந்தத் திட்டமே பாதிக்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.