பி.எஃப்.7 அச்சுறுத்தல் - நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பிக்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு

 
Parilament

பி.எஃப்.7 வகை கொரோனா பரவல் எதிரொலியாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் பி.எஃப்.7 வகை கொரோனா மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு,  மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவும் பி எஃப் 7  கொரோனா  இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில்  பி எஃப் 7 வகை கொரோனா தொற்று குஜராத்தில் இருவருக்கும்,  ஒடிசா மற்றும் ஆந்திராவில் தலா ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் உயர்மட்ட குழு உடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். 
 
இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.