மகாராஷ்டிரா சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து

 
maharastra

உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மகாராஷ்டிராவில் இன்று நடைபெறவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துக்கியதோடு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று  மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்ற சென்ற நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  தனது முதல்வர் பதவியையும்,  , சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்ட கூட்டணி  தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

maharastra


  
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று நடைபெறவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் இன்று நடைபெறவிருந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.