காங்கிரஸ் தலைவர் தேர்தல் - மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டி?

 
tn

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார்.

tn

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.  தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதருர் போட்டியிடுகிறார்.  வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும்,   மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

tn

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களம் காண இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் கே.சி.வேணுகோபால் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.