காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - பீகாரை சேர்ந்த தொழிலாளி பலி

 
kashmir

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 

காஷ்மீரில் உள்ள பந்திப்போரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென அந்த பகுதியில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறாது. இந்த தாக்குதலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டனர். மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.  
 
இதேபோல் நேற்று காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம்  முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் அந்த இரண்டு பயங்கரவாதிகளுகு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த  தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.