நாடு முழுவதும் நீட் தேர்வு - தேர்வு நேரம் நீட்டிப்பு!!

 
neet-s4

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்றுமுதல் தொடங்கிவிட்டது. தமிழ் , ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓஎம்ஆர்  விடைத்தாள் மூலம் நடத்தப்படும் என்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர் அனைவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது.   நாடு முழுவதும் 543 மையங்களில் வெளிநாடுகளில் 14 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 

neet

நீட் தேர்வுக்கு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே மாதம்6ம் தேதி இரவு 11 மணி 50 நிமிடங்கள் வரை பதிவு செய்ய முடியுமென்றும் , விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7-ஆம் தேதி கடைசி தேதி என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

NEET, JEE தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – டெல்லி துணை முதல்வர்

இந்நிலையில் ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பகல் 2 மணி முதல் மாலை 5 :20 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் தேர்வு நேரம் எழுதுவதற்கான நேரம்  200 நிமிடங்கள் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே நீட் தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.