#BREAKING உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு!

 
tn

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுள்ளார்.

tn

நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய்  உமேஷ் லலித் இன்று பதவியேற்றுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு  தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த என்.வி ரமணா .நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு அடுத்தபடியாக மிக மூத்த நீதிபதியாக இருந்து வந்த யு.யு.லலித் உச்ச நீதிமன்றத்தின் 49 ஆவது  தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

tn
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் . இவரது தந்தை யு.ஆர். லலித் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் . மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை  சேர்ந்த இவர் 1983ல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.  1985 வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த இவர் , 1986 ஆம் ஆண்டு டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.  2004 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதியானார். தற்போது உச்சநீதிமன்றத்தின்தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.