‘செய்தி நிறுவனங்களுக்கு வருவாய் தரவில்லை..’ கூகுளுக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு...

 
கூகுள்’ நிறுவனம் மீது இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் புகார்- இந்திய போட்டி ஆணையம் விசாரணை

 
இந்திய பத்திரிகை நிறுவனங்கள் சங்கம் அளித்த  புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய செய்தி நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்து நாட்டு நடப்புகளை சேகரித்து செய்திகளாக வெளியிடுகின்றன. ஆனால் இந்த செய்திகள் வாயிலாக  வருவாய் ஈட்டும் கூகுள் நிறுவனம், அதனை செய்தி நிறுவனங்களுக்கு முறையாக பகிர்ந்து வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் இந்திய செய்தி நிறுவனங்களின் பிரதிநிதித்துவ அமைப்பான இந்திய பத்திரிக்கை நிறுவனங்கள் சங்கம் ( ஐ.என்.எஸ் ) புகார் அளித்துள்ளது.

கூகுள்

இதுகுறித்து ஐ.என்.எஸ்  பொது செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கூகுள் போன்ற தேடுபொருளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இணையத்தில்  நடப்பு நிகழ்வுகளை  அறிந்து கொள்ளும் வகையில்,  இந்திய செய்தி ஊடகங்கள் செய்திகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த செய்திகளை உருவாக்க அதிகளவு பணம் முதலீடு செய்தும், அதற்குரிய வருவாயை  கூகுள் நிறுவன வழங்குவதில்லை என்றும், ஆகையால் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் ,  செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றியியுள்ளதை  சுட்டிக்காட்டி அவர்,  விளம்பரங்கள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் குறித்தோ,  அதில் செய்தி  நிறுவனங்களுக்கு எத்தனை சதவீத பணம் கொடுக்கிறது என்பது குறித்தோ, கூகுள் நிறுவனம்  செய்தி நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும்  கூறியுள்ளார்.

இந்தியாவின் மோசமான மொழி எது? கூகுள் சொன்ன பதிலால் கொந்தளித்த மக்கள்!

கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், விளம்பர வருவாய் பகிர்வில் செய்தி நிறுவனங்கள் மொத்தமாக இருளில் வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து  இந்த புகார்களை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், போட்டி சட்டம் 2002-யின் கீழ் கூகுளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பபதை கண்டறிந்தது.  மேலும்  விரிவான விசாரணையை மேற்கொள்ள தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஐ.என்.எஸ். தெரிவித்துள்ளது.   செய்தி நிறுவனங்களுக்கு நியாயமாகவும்  மற்றும் வெளிப்படையாகவும்  விளம்பர வருவாயை கூகுள் பகிர வேண்டும் எனவும், இதற்கான நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஐ.என்.எஸ் வலியுறுத்தியுள்ளது.