தனியார் பேருந்தும் அரிசி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் பலி

 
Karnataka

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகேயுள்ள நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும், அரிசி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோலாப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தேசிய சுற்றுலாப் பேருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி - தார்வாத் தாரிஹாலா நெஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்திசையில் அரிசி ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென இரண்டும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் அரிசி லாரி ஆகிய இரண்டும் அப்பளம் போல் நொறுங்கின. இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் தனியார் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்து அனைவருக்கும் ஹூப்ளி கிம்பால்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

karnataka

விபத்து குறித்து தகவலறிந்த ஹூப்ளி-தர்வாட் போலீஸ் கமிஷனர் லாபுராவ் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்துக்குள்ளான லாரி மற்றும் பேருந்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து சம்பவம் குறித்து போலீசாஅர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு 12 மணிக்கு மேல் இந்த விபத்து நடந்துள்ளதால் தூக்க கலக்கத்தில் இந்த கோர விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.