நடைபயணத்தில் கேஜிஎப் பட பாடல்- ராகுல்காந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 
rahul gandhi

தேசிய ஒற்றுமை யாத்திரையில் கேஜிஎப்-2 திரைப்பட பாடல் பயன்படுத்திய புகாரில் ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Image

ராகுல்காந்தி நடத்திய வரும் தேச ஒற்றுமை பேரணியில் நீதிமன்ற உத்தரவு மீறி கேஜிஎப்-2 திரைப்பட பாடல் பயன்பத்தி வருவதாக எழுந்துள்ள புகாரில் ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த அக்டோர் 3ம் தேதி தொடங்கி 20 நாட்கள் தேசிய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தினார். அப்போது கேஜிஎப்-2 திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றை பாதயாத்திரையில் பயன்படுத்தி வருவதை தடை செய்து அத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் ஜோடோ சமூகவளைத்தலங்களை முடக்க வேண்டும் என்று எம்ஆர்டி மியூசிக்கல் நிறுவனம் பெங்களூரு 85வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் அடைத்து சமூக வளைதலங்களையும் முடக்க செய்து உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல், பாதயாத்திரையில் கேஜிஎப்-2 திரைப்பட பாடல் பயன்படுத்துவது நிறுத்தப்படும் என்று உறுதிமொழி கொடுத்ததை ஏற்று கொண்ட நீதிமன்றம், சமூகவளைத்தலங்களை முடிக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இந்நிலையில் எம்ஆர்டி மியூசிக்கல் நிறுவனம் மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராகுல்காந்தி நடத்தி வரும் பாதயாத்திரையில் கேஜிஎப்-2 திரைப்படத்தின் பாடல்கள் நீதிமன்ற உத்தரவை மீறி பயன்படுத்தி வருகிறார்கள். 

இது நீதிமன்ற அவமதிப்பாக இருப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இன்று இந்த மனு தலைமை நீதிபதி பி.பி.வர்லே மற்றும் நீதிபதி அசோக் எஸ்.கிணகி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதத்தை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இப்புகாரில் விளக்கம் கேட்டு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஜெயராம்ரமேஷ், காங்கிரஸ் சமூகவளத்தல பிரிவு நிர்வாகி சுப்ரியா ஶ்ரீநாத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 2023 ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.