நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு

 
protest

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.   இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவை தொடங்கியவுடன் அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Parliament

இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு போராட்டமும் நடத்தக் கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.