குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவு

 
vote

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 11 மணி நிலவரப்படி 18.95% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  19 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 89 தொகுதிகளில் இன்று முதற்கட்ட  தேர்தல் நடைபெறுகிறது.  பாஜக, காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்கள்.  நிகழ்ச்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது ஆம் ஆத்மி.  89 தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.  இதில் 339 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதும் 70 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.  இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

காலை 9 மணி நிலவரப்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 4.92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில்,  11 மணி நிலவரப்படி 18.95% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.