மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

 
modi

மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஐநா சபையால் முன்னெடுக்கப்பட்டது. ”அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தீர்வுகள், அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தைப் படைப்பதில் புதுமையின் பங்கு” என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருள். இதனிடையே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.