தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது- பிரதமா் மோடி

 
modi

அனைத்து கல்வி அறிவையும் நம் சொந்த மொழியிலேயே அளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், தேசிய கல்விக் கொள்கை 
தாய்மொழியை ஊக்குவிக்கிறது எனவும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின் 50-ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நமது மொழிகள் வளா்ச்சி அடையவில்லை. அதனால் மக்கள் கல்வி அறிவைப் பெற இயலாத சூழல் இருந்தது. புதிய கண்டுபிடிப்புகளும் புத்தாக்க முயற்சிகளும் குறைவாகவே இருந்தன. தற்போது நவீன தொழில்நுட்ப அறிவின் உதவியுடன் 21-ஆம் நூற்றாண்டில் 4-ஆவது தொழில் புரட்சி, இந்தியாவின் தலைமையில் ஏற்படும். அனைத்து கல்வி அறிவையும் நம் சொந்த மொழியிலேயே அளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.   தேசிய மொழிபெயா்ப்பு திட்டம் தொடங்குவது குறித்து விவாதித்து வருகிறோம். இதேபோல், தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழியை ஊக்குவித்து வருகிறோம்.

modi


இந்தியா்கள் அனைவரையும் இணையவசதி மூலம் ஒன்றிணைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. அது, ஒரே இந்தியா, உன்னத இந்தியா திட்டம் வெற்றி பெற உதவியாக இருக்கும்.இந்த ஆண்டு எதிர்பாராத வெள்ளத்தால் இந்த மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவும் அவருடைய குழுவினரும் மக்களின் துயா் துடைக்க கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.   இதுதொடா்பாக நானும் முதல்வருடன் தொடா்ந்து பேசி வருகிறேன். மக்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு நானும் மாநில முதல்வரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.