குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி

 
modi

குடியரசு தலைவர் தேர்தலையொட்டி நடாளுமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். 

இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெறுகிறது.  தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும்  , எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவுரைகிறது.  நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த எம்.பிக்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.