பிரதமரின் ராமநவமி வாழ்த்து - 161 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை திறக்கிறார்!!

 
modi

ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி நாளான இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  நாட்டு மக்களுக்கு ராமநவமி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம்  கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டுள்ளார்.

modi

அத்துடன்  கர்நாடக மாநிலம் துமகூரு அருகே அமைக்கப்பட்ட 161 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைக்கிறார். பிதனகெரே கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா மடத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை ராமநவமி ஒட்டி இன்று திறக்கப்படுகிறது.

modi

இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் உள்ள உமியா மாதா கோவிலின் 14வது நிறுவன தின விழாவில் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.  கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் மோடியால் இந்த கோவில் திறந்து வைக்கப்பட்டது. ராமநவமி முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ,துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.