சுமுகமான முறையில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்க வேண்டும் - பிரதமர் மோடி

 
modi

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் சுமுகமான முறையில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்க்களவை எம்.பி.க்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 

modi

வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இன்று நடக்கும் நாடாளுமன்ற கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றது. அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் . ஆனால் முடிவுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். சுமுகமான முறையில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பிக்களும் திறந்த மனதுடன் பேச வேண்டும். தேவைப்பட்டால் விவாதங்கள் நடத்த வேண்டும். அனைத்து எம்.பிக்களும் சிந்திந்து விவாதங்களை மேற்கொண்டு அமர்வை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.