மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு

 
modi modi

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மாநிலங்களவை தலைமையேற்று நடத்தும் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் வருகிற 29 தேதி வரை 17 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடக்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

jegadeep

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மாநிலங்களவை தலைமையேற்று நடத்துகிறார் ஜெகதீப் தன்கர். இதனிடையே மாநிலங்களைவை முதல் நாள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர், சைனிக் பள்ளியில் படித்தவர். கடும் போராட்டத்திற்கு பிறகே இந்நிலையை வந்தடைந்துள்ளார் தன்கர். பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விவசாயிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் தன்கர். இவ்வாறு கூறினார். பிதமர் மோடி பாராட்டி பேசிய போது எம்.பிக்கள் மேஜைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

இதேபோல் மக்களவையிலும் குளிர்கால கூட்டாத்தொடர் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.