குவாட் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

 
PM Modi

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. குவாட் தலைவர்களின் முதல் நேரடிக் கூட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்நிலையில், குவாட் தலைவர்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது. 

quad

இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த தகவலை வெறியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

indo pasific

இருந்த போதிலும் இந்த கூட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்த நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.