பெரும் பரபரப்பு! பிரதமர் மோடியின் தாயார் திடீரென மருத்துவமனையில் அனுமதி

 
Modi

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து வருவதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தாய் ஹீராபென் மோடியை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல், குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றது குறிபிடதக்கது.