நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53..

 
 PSLV-C53 ராக்கெட்’

மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு  பிஎஸ்எல்வி ராக்கெட்  விண்ணில் பாய்கிறது,  அதற்கான  25 மணி நேர கவுண்டவுன்ட் இன்று ( ஜூன் 29 ஆம் தேதி)  மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.  டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன்  நாளை விண்ணில்  ஏவப்பட இருக்கிறது,    முழுக்க முழுக்க வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இந்த ராக்கெட்டை இஸ்ரோ முன்னெடுத்திருக்கிறது.

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 53 ராக்கெட்

 இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி சி- 53  ராக்கெட் திட்டம் இதுவேயாகும். பிஎஸ்எல்வி சி - 3 ராக்கெட் தாங்கிச்  செல்லும் டிஎஸ்- இஓ செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்படுகிறது.   பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள் சிங்கப்பூரின்  புவி கண்காணிப்பு,  வேளாண்,  வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளது.

 பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் - இஸ்ரோ

இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன.  இதனைத்தொடர்ந்து நிகழாண்டில் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ  திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.