2 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் ஏசி பெட்டிகளில் மீண்டும் தொடங்கும் சேவை - பயணிகள் மகிழ்ச்சி..

 
2 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் ஏசி பெட்டிகளில் மீண்டும் தொடங்கும் சேவை - பயணிகள் மகிழ்ச்சி..

2 ஆண்டுகளுக்குப்  பிறகு ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்பு, தலியனை போன்றவை வழங்கப்பட உள்ளன. இதற்காக சுமார் 6 லட்சம் போர்வைகள் புதிதாக தயார் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக  ரயில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே துறை விதித்திருந்தது.  முன்பதிவு இல்லாத  ரயில் பயணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.   அதில் ஒன்றாக  ஏ.சி. பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த  தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு போன்றவை நிறுத்தப்பட்டன.  அவ்வாறு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தாங்களாகவே போர்வைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அத்துடன் ரயிலில் உணவு வழங்கும் சேவையும் நிறுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஏசி வகுப்பில் இனி போர்வை, கம்பளிகள் வழங்கப்படும் என அறிவிப்பு..

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், உணவு வழங்குதல், முன்பதிவில்லாத பெட்டிகளை இணைத்தல் போன்ற வசதிகளை தொடங்கியது. அதேபோல்  மீண்டும் ரயில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகள் , தலையணை உள்ளிட்டவை வழங்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது.   அத்துடன்  வருகிற 31-ந்தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஏசி வகுப்பில் இனி போர்வை, கம்பளிகள் வழங்கப்படும் என அறிவிப்பு..

இதையடுத்து தெற்கு ரெயில்வேயில் உள்ள அனைத்து ரெயில்களிலும் குளிர்சாதன பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்பு வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக  சுமார் 6 லட்சம் போர்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது. 2 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்ததால் பழையனவற்றை அப்புறப்படுத்திவிட்டு  புதிதாக  டெண்டர் கோரப்பட்டு , தயாரிப்பு பணிக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

முதலில் ஏ.சி பெட்டிகளுக்கு, பின்னர் 2ம் வகுப்பு பெட்டி, 3ம் வகுப்பு பெட்டிகள் என படிப்படியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஒரு ரயிலில் கொடுத்துவிட்டு மற்றொரு ரயிலில் கொடுக்கவில்லை என்றால் பிரச்சனைகள் வரும் என்பதால், மொத்தமாக தயார் செய்துவிட்டு 2 வாரங்களில் அனைத்து ரயில்களிலும் விநியோகிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.