பத்தனம்திட்டா பயங்கரம்: 3 பேரையும் 9 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

 
n

 கேரள மாநிலத்தில் கடவந்தாரா பகுதியில் சாலை ஓத்தில் லாட்டரி சீட்டு விற்று வந்த ரோஸ்லி என்கிற 59 வயது பெண் திடீரென்று காணாமல் போனார்.  இதை அடுத்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணும்  எர்ணாகுளத்தில் தங்கி இருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த போது அவரும் திடீரென்று காணாமல் போனார்.

 போலீசாரின் விசாரணையில் பத்தனம்திட்டாவில் இருவரையும் நரபலி கொடுத்தது தெரிய வந்தது.  அவர்களின்  இறைச்சியை சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது.   இதை அடுத்து ஷாஜி , பகவல்சிங்,  லைலா மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர் .  இந்த நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது.

ke

 கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரையும் 12 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் ஜூடிசியல்  மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.

 மூன்று பேரின் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.  நரபலி கொடுப்பதற்காக இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று அதற்கான காரணத்தை கேரள உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

 குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் 9 நாள் போலீஸ் காவில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.   இந்த மூன்று பேரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 நிமிடங்களுக்கு தங்கள் வழக்கறிஞரை சந்திக்கவும் கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.